\
கொரோனாவில் இருந்து மீண்ட கமல்ஹாசன்.. டிச.4ம் தேதி முதல் வழக்கமான பணிகளை கவனிப்பார்

கொரோனாவில் இருந்து மீண்ட கமல்ஹாசன்.. டிச.4ம் தேதி முதல் வழக்கமான பணிகளை கவனிப்பார்

கொரோனாவில் இருந்து மீண்ட கமல்ஹாசன்.. டிச.4ம் தேதி முதல் வழக்கமான பணிகளை கவனிப்பார்
Published on

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கமல்ஹாசன், பாதிப்பில் இருந்து முழுவதும் குணமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கு சென்றுவந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு லேசான இருமல் இருந்ததால் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்

இந்நிலையில், கமல்ஹாசன் கொரோனா தொற்றில் இருந்து முழுவதுமாக குணமடைந்து விட்டதாக தெரிவித்துள்ள மருத்துவமனை நிர்வாகம், நாளை மறுநாள் வரை மருத்துவமனையில் இருப்பார் என்றும் வரும் 4ஆம் தேதி முதல் தனது வழக்கமான பணிகளை கவனிப்பார் என்றும் தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com