Project K Poster
Project K Poster@PrabhasRaju, File image

பிரபாஸின் ‘புராஜெக்ட் கே’ படத்தில் இணைந்த கமல் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாவதால், ‘புராஜெக்ட் கே’ படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

கீர்த்தி சுரேஷின் ‘மகாநதி’ படத்தை இயக்கிய நாக் அஸ்வின் தற்போது ‘புராஜெக்ட் கே’ என்றப் படத்தை இயக்கி வருகிறார். பெரும் பொருட் செலவில் உருவாகி வரும் இந்தப் படத்தில் பிரபாஸ், திஷா பதானி, தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாவதால், இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

இந்தப் படத்தில் நடிகர் கமல்ஹாசன் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில், இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவீஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “மாபெரும் நடிகர் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களை வரவேற்கிறோம். எங்களது பயணம் இப்போது உலகளாவியதாகிவிட்டது” என்று குறிப்பிட்டுள்ளது.

இந்தப் படத்தில் 120 முதல் 180 கோடி வரை நடிகர் கமல்ஹாசனுக்கு சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. நடிகர் கமல்ஹாசன் ‘இந்தியன்-2’ படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து நாக் அஸ்வின் படத்திலும், அதன்பிறகு அ.வினோத் இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படங்களின் மூலம் மட்டும் கோலிவுட்டில் இந்த வருடம் அதிகம் சம்பாதிக்கும் நபராக கமல்ஹாசன் இருப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ‘புராஜெக்ட் கே’ படத்திற்கு சந்தோஷ் நாரயணன் இசையமைக்கிறார். 70 முதல் 80 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், அமிதாப் மற்றும் தீபிகா படுகோனேவின் படப்பிடிப்புகள் இன்னும் சில நாட்களில் முடிவடையவுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com