கமல்ஹாசனின் அரசியல் மீது மிகுந்த மரியாதை உள்ளது: சூர்யா

கமல்ஹாசனின் அரசியல் மீது மிகுந்த மரியாதை உள்ளது: சூர்யா
கமல்ஹாசனின் அரசியல் மீது மிகுந்த மரியாதை உள்ளது: சூர்யா

கமல்ஹாசனின் அரசியல் மீது மிகுந்த மரியாதை உள்ளது என்று நடிகர் சூர்யா பேசியுள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யாவின் மிரட்டலான நடிப்பில் உருவான கஜினி திரைப்படம் கடந்த 2005ம் ஆண்டு செப்டம்பர் 29 ஆம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அந்தப்படத்தில் சூர்யாவின் கெட் அப் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இந்தப் படம் 2008 ஆம் ஆண்டு ஆமிர்கான் நடிப்பில் பாலிவுட்டில் வெளியாகி அங்கும் வெற்றி வாகை சூடியது.

தமிழில் கஜினி படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆனதையொட்டி பிரபல சினிமா விமர்சகர் ராஜீவ் மசந்த்-க்கு விரிவான பேட்டி ஒன்றினை கொடுத்துள்ளார் சூர்யா. இந்தப் பேட்டியின் போது தன்னுடைய சொந்த வாழ்க்கை, திரைப்பட வாழ்க்கை, சூரரைப் போற்று திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக பேசியிருந்தார்.

அந்தப் போட்டியில் பேசிய சூர்யா, “என்னுடைய சக்திக்கு என்னால் முடிந்த விஷயங்களை செய்து வருகிறேன். கமல்ஹாசனின் அரசியல் மீது மிகப்பெரிய மரியாதை உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com