அந்தகாரம் படக்குழுவை நேரில் வாழ்த்திய கமல்ஹாசன்; நெகிழ்ச்சியில் அட்லி!

அந்தகாரம் படக்குழுவை நேரில் வாழ்த்திய கமல்ஹாசன்; நெகிழ்ச்சியில் அட்லி!
அந்தகாரம் படக்குழுவை நேரில் வாழ்த்திய கமல்ஹாசன்; நெகிழ்ச்சியில் அட்லி!

கடந்தவாரம் ஓடிடியில் வெளியான அந்தகாரம் படக்குழுவினரை நேரில் அழைத்து நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இயக்குநர் அட்லி தயாரித்த ’அந்தகாரம்’ படம் கடந்த நவம்பர் 24 ஆம் தேதி ஓடிடியில் வெளியானது.

அறிமுக இயக்குநர் விக்னராஜன் இயக்கியுள்ள ’அந்தகாரம்’ இப்படத்தில் ஹீரோவாக அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். ’கைதி’ படத்தில் கஞ்சாவுக்காக சண்டையிடும் அதே மிரட்டல் அர்ஜூன் தாஸ்தான். இவர், விஜய்யின் மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார். ஆர்.ஜேவான அர்ஜுன் தாஸ் குரலுக்கு ரசிகர்கள் கூட்டமே உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியாகி ‘வித்யாசமான திரைப்படம்’ என்று சினிமா ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது ’அந்தகாரம்’.

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ’சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறினார் அட்லி. இந்நிலையில், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்தகாரம் படத்தை தயாரித்துள்ளார். இப்படம், தமிழ், தெலுங்கு என நெட் ஃபிளிக்ஸில்  நவம்பர் 24 ஆம் தேதி வெளியானது.

இந்நிலையில் படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் கமல்ஹாசன்  படக்குழுவை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள அட்லி ”எங்கள் படக்குழுவுக்கு ஆசிர்வாதம் கிடைத்தது. எப்போதும் எங்களுடன் இருப்பதற்கும் எங்களுக்கு ஆதரவளிப்பதற்கும் நன்றி சார். உங்கள் வார்த்தைகள் எப்போதும் எதையாவது செய்ய எங்களுக்கு ஊக்கத்தை அளித்தது. லவ் யூ சார்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் அட்லி. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com