புற்றுநோயுடன் போராடும் ரசிகருடன் ஜூம் காலில் பேசி நம்பிக்கையூட்டிய கமல்ஹாசன்

புற்றுநோயுடன் போராடும் ரசிகருடன் ஜூம் காலில் பேசி நம்பிக்கையூட்டிய கமல்ஹாசன்
புற்றுநோயுடன் போராடும் ரசிகருடன் ஜூம் காலில் பேசி நம்பிக்கையூட்டிய கமல்ஹாசன்

மூளைப் புற்றுநோயுடன் போராடும் தனது ரசிகருடன் ஜூம் காலில் பேசி நம்பிக்கையூட்டியுள்ளார் நடிகர் கமல்ஹாசன். 

கனடா வாழ் தமிழரும் கமல்ஹாசனின் தீவிர ரசிகருமான சாகேத், மூளைப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அபாயக்கட்டத்தில் உள்ளார். இவரது, தீராத விருப்பம் கமல்ஹாசனிடம் பேசவேண்டும் என்பதுதான். இதனை, நண்பர்கள் மூலம் கேள்விப்பட்ட கமல்ஹாசன், திடீரென்று ஜூம் காலில் வந்து பேச, சாகேத்துக்கு நம்பிக்கையே இல்லை. இது, நிஜம்தானா? என்று நம்பமுடியாமல் அதிசயத்து போய் உற்சாகமுடன் பேச ஆரம்பித்துவிட்டார்.

கமல்ஹாசன் நலம் விசாரிக்க, பதிலுக்கு சாகேத்தும் நலம் விசாரிக்க  சாகேத்தின், குடும்பமே மகிழ்ச்சி வெள்ளத்தில் தத்தளித்தது.  ”உங்கள் ரசிகர் என்பதால் எனது மகனுக்கு விருமாண்டி என்று பெயர் வைத்துள்ளேன்” என்றார் சாகேத்.  கமல் மகிழ்ச்சியில் புன்னகை பூத்தார்.

’நான் ஊருக்கு வந்து உங்களைப் பார்க்கலாமா?’ என்று சாகேத் கேட்க, ”எப்போது வேண்டுமானலும் எந்த நேரத்திலும் என்னைப் பார்க்கலாம்” என்றார் கமல்ஹாசன்.

வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் சிலநாட்களில் இறந்துவிடப்போகும் புற்றுநோயாளிக்கு நம்பிக்கையூட்டும் விதமாக நடித்திருப்பார்.  அது, தற்போது நிஜவாழ்க்கையிலும் நடந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com