’சார்பட்டா பரம்பரை’ படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய கமல்ஹாசன்
இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘சார்பட்டா பரம்பரை’ படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
கடந்த ஜூலை 22 ஆம் ஆம் தேதி இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘சார்பட்டா பரம்பரை’ வெளியாகி பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்களை குவித்து வருகிறது.
இப்படத்தை தமிழ் சினிமாவின் சிறந்த ஸ்போர்ட்ஸ் படங்களில் ஒன்றாகவும் விமர்சகர்கள் பட்டியலிட்டுள்ளார்கள். ஆர்யா, துஷாரா விஜயன், ஜான் கொக்கன், ஷபீர், ஜான் விஜய் ஆகிய நடிகர்களின் பெயர்களே மறந்துவிட்டு கபிலன், மாரியம்மாள், வேம்புலி, டான்சிங் ரோஸ், டேடி போன்ற கதாபாத்திரங்களின் பெயர்களே நம் மனதில் நிற்கும் அளவிற்கு திரைக்கதையை சுவாரசியமாக வடிவமைத்திருப்பார் இயக்குநர் பா.ரஞ்சித்.
இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் ரஞ்சித், நடிகர் ஆர்யா, துஷாரா விஜயன், ஷபீர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரையும் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.