\
கமலும் சிம்புவும் இணையும் சிகப்பு ரோஜாக்கள் 2?

கமலும் சிம்புவும் இணையும் சிகப்பு ரோஜாக்கள் 2?

கமலும் சிம்புவும் இணையும் சிகப்பு ரோஜாக்கள் 2?
Published on

பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவியும் இணைந்து நடித்து 1978ம் ஆண்டு வெளியான படம் சிகப்பு ரோஜாக்கள். சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமாக வெளியாகி மக்களிடம் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. பெண்களை வெறுக்கும் கதாபாத்திரத்தில் கமல் நடித்திருப்பார். மீண்டும் அந்தப் படத்தை இயக்கும் முயற்சியில் இருக்கிறார் பாரதிராஜாவின் மகன் மனோஜ். தற்போது அதில் கமலும் சிம்புவும் இணைய வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஏற்கெனவே, தன் தந்தையுடன் இணைந்து சிகப்பு ரோஜாக்கள் 2 படத்தை இயக்கப்போவதாக அறிவித்திருந்த மனோஜ், அதற்கான ஆரம்பக்கட்டப் பணிகளில் மும்முரமாக இருக்கிறார். அதில் முக்கியமான கதாபாத்திரத்தில் சிம்பு நடிப்பதற்கான பேச்சுவார்த்தையில் மனோஜ் ஈடுபட்டுள்ளார். இதேபோன்ற கதையம்சம் உள்ள மன்மதன் படத்தில் நடித்த அனுபவம் சிம்புவுக்கு இருக்கிறது. சிகப்பு ரோஜாக்கள் 2 படத்தில் அவருக்கும் கமலுக்கும் மிக முக்கியமான கதாபாத்திரங்களை மனோஜ் உருவாக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

படம் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால் கமலும், சிம்புவும் முதன்முதலில் இணையும் படமாக சிகப்பு ரோஜாக்கள் 2 இருக்கும்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com