ரயில்களில் கமல்ஹாசனின் 'விக்ரம்' திரைப்பட விளம்பரங்கள்

ரயில்களில் கமல்ஹாசனின் 'விக்ரம்' திரைப்பட விளம்பரங்கள்

ரயில்களில் கமல்ஹாசனின் 'விக்ரம்' திரைப்பட விளம்பரங்கள்
Published on

கமல்ஹாசன் நடித்து வெளியீட்டுக்கு தயாராக உள்ள 'விக்ரம்' திரைப்படத்துக்கு ரயில்களில் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.

மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹாட்ரிக் வெற்றிகளைக் கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள திரைப்படம் 'விக்ரம்'. ஜூன் 3 ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படத்துக்கான விளம்பரங்களை பிரம்மாண்டமாக மேற்கொண்டுள்ளது படக்குழு. படத்தை ரயில் பெட்டிகளில் மிகப்பெரிய அளவில் ஒட்டி விளம்பரம் செய்துவருகிறது.

ரயிலில் 'விக்ரம்' விளம்பரம் இடம்பெற்றுள்ள காட்சிகளை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கமல்ஹாசன், ரயில் பயணம் தனக்குப் பிடிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். மூன்றாம் பிறை, தேவர் மகன், மகாநதி திரைப்படங்களின் ரயில் காட்சிகளை அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com