மதம் மாறிய மகளுக்கு கமல் வாழ்த்து!

மதம் மாறிய மகளுக்கு கமல் வாழ்த்து!
மதம் மாறிய மகளுக்கு கமல் வாழ்த்து!

புத்த மதத்திற்கு மாறியுள்ள தனது இரண்டாவது மகள் அக்‌ஷரா ஹாசனுக்கு கமல் ஹாசன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

சிவா இயக்கத்தில் அஜித்துடன் விவேகம் படத்தில் நடித்துள்ள அக்‌ஷரா ஹாசன் அப்படத்தின் ப்ரமோசன்களில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், “முதலில் நாத்திகராக இருந்தேன். இப்போது புத்த மதத்திற்கு மாறிவிட்டேன். எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால் கடவுளை நேசிப்பவர்களை எப்போதும் மதிப்பேன். எனக்கு புத்த மதம் பிடிக்கும். அது வாழ்வியலோடு கலந்தது. அதில் நிறைய விஷயங்களைக் கற்றுவருவதால் என்னை இணைத்துக் கொண்டேன்” எனத் தெரிவித்து இருந்தார்.
 
இதனைத் தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் கமல், “ஹாய்! அக்‌ஷு... நீ மதம் மாறி விட்டாயா? உனக்கு எனது அன்பு. அதற்காக உன்னை வாழ்த்துகிறேன். சிறப்பாக வாழ். லவ் யு பப்பு” என வாழ்த்துகளை அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com