காப்புரிமை பிரச்னை பரபரப்பாக பேசப்பட்டுவரும் சூழலில், நடிகர் கமல்ஹாசன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பலமணி நேரம் பேசி ஆறுதல் தெரிவித்ததாக பின்னணிப் பாடகர் எஸ்பிபி பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
இளையராஜா உடனான சர்ச்சைக்குப் பிறகு, அமெரிக்காவின் சான்ஜோஸ் நகரில் நடைபெற்ற இசைக் கச்சேரியில் பாலசுப்ரமணியம் மனம் திறந்துள்ளார். 19ம் தேதி 3 மணி நேரம் நடந்த கச்சேரியில் இளையராஜா பாடல்கள் தவிர்த்து மற்ற தமிழ்த் திரைப்பட பாடல்களே பாடியதாகவும், ரசிகர்கள் அதனால் ஏமாற்றமின்றி ரசித்ததாகவும் பாலசுப்ரமணியம் கூறியிருக்கிறார். கமல் நடித்த சிம்லா ஸ்பெஷல் படத்தில் இடம்பெற்றிருக்கும் உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா என்ற பாடலைப் பாடியபோது, யாராரோ நண்பர் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு என்ற வரியை எஸ்பி பாலசுப்ரமணியம் மீண்டும் மீண்டும் பாடி உணர்ச்சிவயப்பட்டிருக்கிறார்.