ஸ்ருதி நடிப்பை புகழ்ந்த கமல்!

ஸ்ருதி நடிப்பை புகழ்ந்த கமல்!
ஸ்ருதி நடிப்பை புகழ்ந்த கமல்!

ஸ்ருதிஹாசன் இந்தியில் நடித்து சமீபத்தில் வெளியான படம், ’பேஹன் ஹோகி தேரி’. கடந்த வெள்ளிக்கிழமை இந்தப் படம் வெளியானது. ராஜ்குமார் ராவ், கவுதம் குலாடி, குல்சர் குரோவர் உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை அஜய் கே. பன்னாலால் இயக்கியிருந்தார். இந்தியில் இந்தப் படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. இருந்தாலும் தனது அப்பாவும் நடிகருமான கமல்ஹாசனுக்கு இதைப் பிரத்யேகமாக சென்னையில் திரையிட்டுக் காண்பித்தார் ஸ்ருதிஹாசன்.  
படத்தைப் பார்த்த கமல், ஸ்ருதியின் நடிப்பை பாராட்டியுள்ளார். அதோடு படத்தையும் ரசித்துள்ளார். இதை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் படப்பிடிப்புகளுக்கு பிரேக் விட்டுவிட்டு தனது இசை ஆல்ப வேலைகளுக்காக, லண்டன் சென்றிருக்கிறார் ஸ்ருதி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com