\
“கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார்” - எஸ்.ஏ.சந்திரசேகர்

“கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார்” - எஸ்.ஏ.சந்திரசேகர்

“கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார்” - எஸ்.ஏ.சந்திரசேகர்
Published on

அரசியலில் கமல் நிச்சயம் விஸ்வரூபமெடுப்பார் என விஜயின் தந்தை கூறியுள்ளார்

நடிகர் கமல்ஹாசனின் 60 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக ‘உங்கள் நான்’ என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் இளையராஜா, ரஜினிகாந்த், விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கமலின் திரை வாழ்வு குறித்த வரலாற்று சிறப்புக்குறித்த விஷயங்களை பகிர்ந்து வருகின்றனர். 

இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக கமல் அரசியல் வாழ்க்கை குறித்து சில கருத்துக்களை முன்வைத்தார். அப்போது அவர், “சினிமாவில் இருப்பவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்ற பேச்சு சமீபகாலமாக அதிகரித்திருக்கிறது. 

எல்லாத்துறையினரும் அரசியலுக்கு வரும்போது சினிமாக்காரர் ஏன் வரக்கூடாது ? கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார். கமல், ரஜினி எனும் இரண்டு ஜாம்பவான்கள். அவர்கள் இருவரும் இணைந்தால் தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் நல்லது” என்று பேசினார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com