வரும் 20 ஆம் தேதி நடிகர் விஜய்யின் மெர்சல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் கலந்து கொள்ள வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
விஜய் நடித்து, அட்லீ இயக்கியிருக்கும் படம் ‘மெர்சல்’. ஏ.ஆர்.ரஹ்மான் இதற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி, ஆகஸ்டு 20-ம் தேதி பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், சமந்தா ஆகியோரும் நடித்துள்ளனர்.
ராமநாராயணன் தொடங்கிய தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100 வது படம் மெர்சல் என்பதால் இருவரும் கலந்து கொள்வதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளன. ரஜினி, கமல், விஜய் என மூன்று முன்னணி நடிகர்களின் அரசியல் வருகை குறித்த விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், மூவரும் ஒரே மேடையில் தோன்றினால் நிச்சயம் அரசியல் பேச்சு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.