பூக்கோலத்தில் செவிலியர்களுக்கு நன்றி...  கல்யாணி பிரியதர்சனின் ஓணம் செய்தி

பூக்கோலத்தில் செவிலியர்களுக்கு நன்றி... கல்யாணி பிரியதர்சனின் ஓணம் செய்தி

பூக்கோலத்தில் செவிலியர்களுக்கு நன்றி... கல்யாணி பிரியதர்சனின் ஓணம் செய்தி
Published on

சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை கல்யாணி பிரியதர்சன். தற்போது இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கும் மாநாடு படத்தில் சிம்புவுடன் நடித்து வருகிறார். பிரபல இயக்குநர் பிரியதர்சன் - நடிகை லிஸியின் மகளான கல்யாணி, சமூக வலைதளத்தில் ஓணம் விழாவை முன்னிட்டு அழகிய சேலை அணிந்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்தப் படத்தில் பூக்கோலமிட்டு, கொரோனா நோயாளிகளுக்கு தன்னலமின்றி சேவை செய்து உயிர்களைக் காத்த செவிலியர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். ஆறு மாதங்களுக்குப் பிறகு நன்றியுணர்வுடன் வெளியே வந்திருக்கிறார்.

"மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதையும், எங்கள் ஆசீர்வாதங்களுக்கு நன்றி செலுத்துவதையும் பற்றி நான் எப்போதும் ஓணம் வழியாக கற்றுக்கொண்டேன். இந்த ஆண்டில், இடைவிடாத தன்னலமற்ற பணியின் மூலம் எண்ணற்ற கொரோனா நோயாளிகளைக் காப்பாற்றி வீட்டுக்கு நலமுடன் அனுப்பிய செவிலியர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கல்யாணி பிரியதர்சன் நெகிழ்வுடன் பதிவிட்டுள்ளார்.



மேலும், "கொரோனா காலத்தில் பணியாற்றிய நம்முடைய செவிலியர்களின் அன்பு, அக்கறை, ஆதரவுக்கு ஓணம் பூக்கோலத்தை அர்ப்பணிக்கிறேன். நம்முடைய நன்றியைக் காட்டுவதில் நீங்களும் பங்கேற்பீர்கள் என்று நம்புகிறேன்" என்று கல்யாணி பிரியதர்சன், தன் அன்பின் வார்த்தைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com