சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகிறார் கல்யாணி பிரியதர்ஷன்?

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகிறார் கல்யாணி பிரியதர்ஷன்?
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகிறார் கல்யாணி பிரியதர்ஷன்?

சிவகார்த்திகேயன் நடிப்பில் மித்ரன் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படத்தில், இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோயினாக நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

விஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘இரும்புத்திரை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் மித்ரன். சமந்தா, அர்ஜூன் ஆகியோர் நடித்து வெளியான இந்தப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து, இயக்குநர் மித்ரனுடன் சிவகார்த்திகேயன் அடுத்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கடந்த நவம்பர் மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இத்திரைப்படத்தை '24ஏஎம் ஸ்டூடியோ நிறுவனம்' தயாரிக்கிறது. 

பெயரிடப்படாத இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். நடிகர் அர்ஜூன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இத்திரைப்படத்தில் இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோயினாக நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது

கல்யாணி பிரியதர்ஷன் தெலுங்கில் நடித்துள்ளார். ஆனால் தமிழில் இன்னும் கால் பதிக்கவில்லை. முன்னதாக துல்கர் சல்மானின் வான் திரைப்படம் மூலம் கல்யாணி தமிழில் அறிமுகம் ஆவார் என கூறப்பட்ட நிலையில் அதிகாரப்பூர்வமாக செய்திகள் வெளியாகவில்லை. இதனையடுத்து கல்யாணி தனது தமிழ் அறிமுகத்தை நடிகர் சிவகார்த்திகேயனுடன் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com