வெளியாகும் 'கல்கி 2898 AD' திரைப்படம்.. தெலங்கானா அரசின் முடிவால் ரசிகர்கள் கடும் அதிருப்தி!

பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் கல்கி 2898 ஏடி திரைப்படத்திற்கு டிக்கெட் விலையை உயர்த்த தெலங்கானா அரசு அனுமதி அளித்திருப்பது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
KALKI 2898 AD
KALKI 2898 ADputhiya thalaimurai

பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் கல்கி 2898 ஏடி திரைப்படம், வரும் 27ஆம் தேதி வெளியாகிறது. இதன் டிரைலர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் படத்தின் பட்ஜெட் கருதி டிக்கெட் விலையை உயர்த்தவும், அதிக காட்சிகளுக்கும் அனுமதிக்கோரியும் தயாரிப்பு நிறுவனம், தெலங்கானா அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது.

இதனை ஏற்றுள்ள அரசு, படம் வெளியாகும் 27ஆம் தேதியிலிருந்து எட்டு நாட்களுக்கு 5 காட்சிகளை திரையிடவும், திரையரங்குகளில் 70 ரூபாய், மல்டிஃபிளக்ஸ் திரையரங்கில் 100 ரூபாய் டிக்கெட் விலையை உயர்த்தவும் அனுமதி அளித்தது.

KALKI 2898 AD
"KING OF POP" மைக்கேல் ஜாக்சன் நினைவு தினம் இன்று!

அரசின் இந்த முடிவால் கல்கி படத்தின் டிக்கெட் விலை, 265 ரூபாய் முதல் 495 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக ரசிகர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com