’சார்பட்டா பரம்பரை’ படத்தில் ஆழமான, தரமான வேலை செய்ததில் மகிழ்ச்சி! - காளி வெங்கட்

’சார்பட்டா பரம்பரை’ படத்தில் ஆழமான, தரமான வேலை செய்ததில் மகிழ்ச்சி! - காளி வெங்கட்

’சார்பட்டா பரம்பரை’ படத்தில் ஆழமான, தரமான வேலை செய்ததில் மகிழ்ச்சி! - காளி வெங்கட்
Published on

பா.ரஞ்சித்தின் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார் நடிகர் காளி வெங்கட்.

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா, துஷாரா, கலையரசன், காளி வெங்கட் ஆகியோரது நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “சார்பட்டா பரம்பரை ”. சென்னையின் 90 களில் நடந்த பாக்ஸிங்கை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்திற்காக, ஆர்யா கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, 8 பேக் உடற்கட்டுடன் தன்னை தயார்படுத்தினார். சமீபத்தில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் கேரக்டர்கள் அறிமுக வீடியோவும் வெளியாகி வரவேற்பை பெற்றது.

ஆர்யா கபிலனாகவும், ஜான் கொக்கன் வேம்புலியாகவும், கலையரசன் வெற்றிச்செல்வனாகவும், சந்தோஷ் ராமனாகவும், பசுபதி ரங்கன் வாத்தியாராகவும், துஷாரா விஜயன் மாரியம்மாவாகவும், காளி வெங்கட் கோனி சந்திரனாகவும் படத்தில் நடித்துள்ளனர். விரைவில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார் நடிகர் காளி வெங்கட். இதுகுறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் ”சார்பட்டா பரம்பரை டப்பிங் பணிகள் நிறைவு. ஆழமான ,தரமான, நுணுக்கமான, வேலை செய்த மகிழ்ச்சி நன்றி இயக்குனர்” என்று புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

#Sarpatta #dubbing நிறைவு, ஆழமான ,தரமான,நுணுக்கமான, வேலை செய்த மகிழ்ச்சி,நன்றி இயக்குனர் @beemji & #SarpattaTeam @arya_offl @KalaiActor @Music_Santhosh @muraligdop @EditorSelva @Lovekeegam @officialdushara pic.twitter.com/Rew7YRqnxP
— Kaali Venkat (@kaaliactor) April 29, 2021

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com