களவு தொழிற்சாலை படத்தின் 15 நிமிட காட்சிகளை குறித்துள்ளதாக படக்குழு அறிவிப்பு.
சமீபத்தில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் களவு தொழிற்சாலை. சர்வதேச சிலைகடத்தல் எப்படி நடைபெறுகிறது என்ற மர்மத்தை கதைக்களமாக கொண்டு இப்படம் உருவாகியிருந்தது. இப்படம் வெளியாகி மூன்றாவது நாள் முடிய போகிறது. படத்தின் வரவேற்பை கூட்டும் வகையில் 29 முதல் மேலும் புதிதாக அறுபது தியேட்டர்களில் வெளியாக உள்ளது.
இப்படத்தைப் பார்த்த திரை விமர்சகர்கள் படத்தின் இரண்டாம் பகுதி விறுவிறுப்பாக இருக்க காட்சிகளை குறைக்க வேண்டும் என கூறியிருந்தனர். அதனை ஏற்று படத்தின் இரண்டாம் பகுதியில் பதினைந்து நிமிட காட்சிகளை குறைத்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.