\
ஜீவா, அருள்நிதியின்  ’களத்தில் சந்திப்போம்’: டீசரை வெளியிட்ட ஆர்யா, விஜய் சேதுபதி

ஜீவா, அருள்நிதியின் ’களத்தில் சந்திப்போம்’: டீசரை வெளியிட்ட ஆர்யா, விஜய் சேதுபதி

ஜீவா, அருள்நிதியின் ’களத்தில் சந்திப்போம்’: டீசரை வெளியிட்ட ஆர்யா, விஜய் சேதுபதி
Published on

ஜீவா, அருள்நிதி இணைந்து நடிக்கும் முதல் படமான 'களத்தில் சந்திப்போம்' படத்தின் டீசரை இன்று நடிகர் விஜய் சேதுபதியும் ஆர்யாவும் வெளியிட்டிருக்கிறார்கள்.

‘மாப்ள சிங்கம்’ படத்தின் இயக்குநர் ராஜசேகரின் அடுத்தப் படமும் சூப்பர் குட் மூவிஸ் நிறுவனத்தின் 90 வது தயாரிப்பு படமான ’களத்தில் சந்திப்போம்’ படத்தில் ஜீவா,அருள் நிதியுடன் மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர், ராதாரவி, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்நிலையில், இப்படத்தின் டீசரை இன்று மாலை ஆறு மணிக்கு விஜய் சேதுபதியும், ஆர்யாவும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். கபடி வீரர்களாக வரும் அருள் நிதியும், ஜீவாவும் நடிப்புக் களத்தில் போட்டிப்போட்டு நடித்திருக்கிறார்கள்.

இயக்குநர் ராஜசேகர்

ஏற்கனவே, ’மாப்ள சிங்கம்’ படத்திற்கு வசனம் எழுதிய  அசோக் R ( டான் அசோக்) ,அவரது பாணியிலேயே இப்படத்திற்கும் வசனம் எழுதி ’வாவ்’ சொல்ல வைத்திருக்கிறார்.

வசனகர்த்தா அசோக் 

'பொண்ணு கொடுத்து எடுத்தா யாரு வேணா சொந்தக்காரன் ஆகலாம், ஆனா என்ன பண்ணாலும் சொந்தக்காரனெல்லாம் ஃப்ரெண்ட் ஆக முடியாது'... ’அந்தப் பயலுக்கு எப்பவுமே எங்க வீட்டுமேல ஒரு கண்ணு; காரணம் உன் பொண்ணு’... ’நான் இவன்கிட்ட தோக்கலாம்; இவன் என்கிட்ட தோக்கலாம். ஆனா, நாங்க ரெண்டு பேரும் யார் கிட்டயும் தோக்கமாட்டோம்’ என நகைச்சுவையோடு நம்மை சிரிக்க வைத்தும் நட்பை கொண்டாட வைத்தும் அழுத்தமாக மனதில் பதிகின்றன அசோக்கின் வசனங்கள். 

இசை யுவன் ஷங்கர் ராஜா என்பதால் பாடல்களை கேட்க, யுவன் ரசிகர்கள் வெறித்தனமுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், . ட்ரைலரின் பின்னணி இசை யுவன், ஏற்கனவே இசையமைத்த வெவ்வேறு படங்களின் பாடல்களும் தீம் மியூசிக்களும் நினைவுக்கு வந்து காதுகளை இம்சைபடுத்துகிறது

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com