\
பிப். 5ல் தியேட்டரில் வெளியாகும் ஜீவா - அருள்நிதியின் ’களத்தில் சந்திப்போம்’!

பிப். 5ல் தியேட்டரில் வெளியாகும் ஜீவா - அருள்நிதியின் ’களத்தில் சந்திப்போம்’!

பிப். 5ல் தியேட்டரில் வெளியாகும் ஜீவா - அருள்நிதியின் ’களத்தில் சந்திப்போம்’!
Published on

ஜீவா, அருள்நிதி இணைந்து முதல் முறையாக இணைந்து நடித்துள்ள ‘களத்தில் சந்திப்போம்’ படம் வரும் பிப்ரவரி 5 முதல் தியேட்டரில் வெளியாகிறது.  

‘மாப்ள சிங்கம்’ படத்தின் இயக்குநர் ராஜசேகர் தனது இரண்டாவது படமாக இப்படத்தை இயக்கியுள்ளார். அசோக் வசனம் எழுத  யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர், ராதா ரவி,ரோபோ ஷங்கர் உள்ளிடோர் நடித்துள்ள இப்படத்தை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் சார்பில் ஜித்தன் ரமேஷ், ஜீவா உள்ளிடோர் தயாரித்துள்ளார்கள். இது, இந்நிறுவனத்தில் 90 வது தயாரிப்பு படம் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில், தியேட்டர்களில் வெளியான ‘மாஸ்டர்’ கொடுத்த வெற்றியைத் தொடர்ந்து தியேட்டர்களில் தங்களது படங்களை வெளியிட ஆர்வம் காட்டி வருகின்றன தயாரிப்பு நிறுவனங்கள். அந்த வகையில், சிபிராஜின் ‘கபடதாரி’ தைப்பூசம் அன்று வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், களத்தில் சந்திப்போம் வரும் பிப்ரவரி 5 முதல் தியேட்டர்களில் வெளியாகிறது என்று சூப்பர் குட் ஃபிலிம்ஸ் அறிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com