காசியில் கலகலப்பு படப்பிடிப்பு தொடங்கியது

காசியில் கலகலப்பு படப்பிடிப்பு தொடங்கியது

காசியில் கலகலப்பு படப்பிடிப்பு தொடங்கியது
Published on

கலகலப்பு 2 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் முடிவடைந்ததையொட்டி காசியில் அதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

சுந்தர். சி இயக்கும் கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகத்தை அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு சுந்தர் தயாரிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அக்டோபர் 4ம் தேதி காரைக்குடியில் தொடங்கி 15 நாட்கள் நடைபெற்றது. இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு காசியில் தொடங்கியுள்ளது. இதனையடுத்து இந்தூர், புனே மற்றும் ஹைதராபாத் போன்ற இடங்களில் நடைபெற உள்ளது. ஆக ஒட்டுமொத்த படப்பிடிப்பும் டிசம்பர் இரண்டாம் வாரத்துடன் நிறைவடையும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

கலகலப்பு 2 ஆம் பாகத்தில் ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, கேத்ரின் தெரசா, நிக்கி கல்ராணி உள்ளிட்டோர் நடித்து வருகின்றார்கள். மேலும் ராதா ரவி, வி.டி.வி கணேஷ், யோகி பாபு, ரோபோ சங்கர், மனோபாலா, சிங்கம் புலி, வையாபுரி, சந்தானபாரதி, அனுமோகன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

2012 ஆம் ஆண்டு கலகலப்பு முதல் பாகம் முழுக்க முழுக்க காமெடி கதையாக உருவாகியிருந்தது. அந்தப்படம் வசூலில் சாதனை படைத்ததைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com