1500 பேருடன் விக்ரமின், ’அச்சி புச்சி...’

1500 பேருடன் விக்ரமின், ’அச்சி புச்சி...’

1500 பேருடன் விக்ரமின், ’அச்சி புச்சி...’
Published on

கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பில் தயாராகும் படம், ’ஸ்கெட்ச்’.

விக்ரம் ஹீரோ. தமன்னா ஹீரோயின். சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், மதுமிதா, வேல ராமமூர்த்தி உட்பட பலர் நடிக்கின்றனர். இசை, எஸ்.எஸ்.தமன். ஒளிப்பதிவு, சுகுமார்.

விஜய்சந்தர் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறும்போது,  ‘ஷூட்டிங் முடிந்துவிட்டது. படத்திற்காக சென்னையில் பிரமாண்டமான செட் அமைத்து, 'அச்சி புச்சி ஸ்கெட்சு' என்ற பாடலை சமீபத்தில் படமாக்கினோம். விக்ரமும் 150 டான்சர்களும் 1500 மேற்பட்ட துணை நடிகர்களும் பங்கேற்றனர். வட சென்னையை பின்னணியாக கொண்டு உருவாகும் படம் இது. டீசர் விரைவில் வெளியாகிறது’ என்றார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com