\
முதலில் பாலுமகேந்திரா; இப்போது அவரது சிஸ்யர் வெற்றிமாறன் - கலைப்புலி தாணு நெகிழ்ச்சி

முதலில் பாலுமகேந்திரா; இப்போது அவரது சிஸ்யர் வெற்றிமாறன் - கலைப்புலி தாணு நெகிழ்ச்சி

முதலில் பாலுமகேந்திரா; இப்போது அவரது சிஸ்யர் வெற்றிமாறன் - கலைப்புலி தாணு நெகிழ்ச்சி
Published on

வெற்றிமாறனால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறேன் என அசுரன் பட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தெரிவித்தார்.

அசுரன் படம் தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான 2019-ஆம் ஆண்டு தேசிய விருதை வென்றுள்ளது. அதேபோல் சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் தனுஷ் பெற்றுள்ளார்.

இதுகுறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசுகையில், “இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறேன். பாலுமகேந்திரா வண்ண வண்ண பூக்கள் படத்திற்கு தேசிய விருது வாங்கிக்கொடுத்தார். அவரின் சிஸ்யரில் ஒருவரான வெற்றிமாறன் தேசிய விருது வாங்கிக் கொடுத்துள்ளார். இதுபோன்ற நல்ல நல்ல படங்களை தமிழ் சினிமாக்களுக்கு வழங்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். இப்படம் முதலில் திரையில் பார்த்த போது மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருந்தது. அதன்பயனாகவே இந்த இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன. ” என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com