சினிமா
தனுஷின் தப்புக் கணக்கு: போட்டு உடைத்தார் கஜோல்!
தனுஷின் தப்புக் கணக்கு: போட்டு உடைத்தார் கஜோல்!
தனுஷ், கஜோல், அமலா பால், சமுத்திரக்கனி நடித்துள்ள படம், ’விஐபி 2’. சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் அடுத்த மாதம் வெளியாகிறது. இதன் புரமோஷன் நிகழ்ச்சி டெல்லியில் நடந்தது.
அப்போது கஜோல் பேசும்போது, ’இந்தப் படத்தின் கதையை தனுஷ் என்னிடம் சொன்னதும், நான் தயங்கினேன். ஏனென்றால் மொழி பிரச்னை. ’படத்தில் 50 சதவிகிதம் ஆங்கில வசனம்தான், தைரியமாக நடிக்கலாம்’ என்றார் தனுஷ். நான், அதை நம்பி நடித்தேன். ஆனால் தமிழ் வசனம் அதிகமாகவே இருந்தது. தனுஷ் என்னிடம் பொய் சொல்ல மாட்டார்தான். ஆனால் அவர் தப்புக் கணக்கு போட்டுவிட்டார். அதாவது அவர் கணக்கில் வீக் என்பது புரிந்தது’ என்றார் சிரித்துக்கொண்டே.