
வயதான ஹீரோக்களுடன் நடிக்க நடிகை காஜல் அகர்வால் அதிக சம்பளம் கேட்பதாகக் கூறப்படுகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்துவருகிறார் காஜல் அகர்வால். இதுவரை 50 படங்களில் நடித்து முடித்துவிட்டார். இப்போதும் பிசியாக இருக்கும் காஜல் அகர்வாலை தேஜா இயக்கும் தெலுங்கு படத்தில் நடிக்க கேட்டுள்ளனர். இந்த தேஜாதான் தெலுங்கில் காஜலை ஹீரோயினாக அறிமுகப்படுத்தியவர். தேஜா அடுத்து இயக்கும் படத்தில் வெங்கடேஷ் ஹீரோவாக நடிக்கிறார். மூத்த ஹீரோவான அவருடன் நடிக்க காஜல் அகரவால் அதிக சம்பளம் கேட்டதாக தெலுங்கு திரையுலகில் கூறப்படுகிறது.
ஏற்கனவே சிரஞ்சீவியின் ’கைதி நம்பர் 150’ படத்தில் நடிக்க முன்னணி ஹீரோயின்கள் மறுத்த நிலையில் காஜல் மட்டும்தான் சம்மதித்தார். அவருக்கு 2.5 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்கப் பட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் மீண்டும் சீனியர் ஹீரோவுடன் நடிக்கக் கேட்பதால் அதே போன்ற சம்பளம் கேட்டுள்ளார் என்று தெலுங்கு திரையுலகினர் கூறுகின்றனர்.