‘இந்தியன் 2’ படத்தில் என்ன வேடம்? - காஜல் அகர்வால் பேட்டி

‘இந்தியன் 2’ படத்தில் என்ன வேடம்? - காஜல் அகர்வால் பேட்டி

‘இந்தியன் 2’ படத்தில் என்ன வேடம்? - காஜல் அகர்வால் பேட்டி
Published on

‘இந்தியன் 2’ படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் குறித்து நடிகை காஜல் அகர்வால் சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

கடந்த ஆண்டு காஜல் அகர்வால் மற்றும் ஜெயம் ரவி ஆகிய இருவரும் நடித்திருந்த ‘கோமாளி’ திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து ‘பாரிஸ் பாரிஸ்’ படத்தின் தமிழ் ரீமேக் ஆன ‘குயின்’ படத்தில் தற்போது காஜல் நடித்து வருகிறார். இந்தப் படம் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு பல மாதங்களாகிவிட்டன. ஆனாலும் இன்னும் இப்படத்தின் வேலைகள் முடிவடையவில்லை. இதனிடையே கமல்ஹாசன் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படத்தில் இவர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் காஜல் அகர்வால், பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது அவர் ‘இந்தியன்2’ படம் பற்றி சில விவரங்களை கூறினார். ஆனால் அதிகம் அதை குறித்து பேசுவதை அவர் தவிர்த்தார். வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள ‘இந்தியன்2’ படப்பிடிப்பிற்காக அவர் தயாராகி வருவதாக கூறியுள்ளார். மேலும் என் கதாபாத்திரம் மறக்க முடியாத அளவுக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.

‘இந்தியன்’ திரைப்படம் 1996 ஆம் ஆண்டு வெளியானது. அதனை ஷங்கர் இயக்கி இருந்தார். அதில்  சுகன்யா, மனிஷா கொய்ராலா, கஸ்தூரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் மாபெரும் வெற்றியை பெற்றது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com