\
மகாராணியாக ஜொலித்த காஜல் அகர்வால் - இன்ஸ்டாவில் வைரலானப் புகைப்படங்கள்

மகாராணியாக ஜொலித்த காஜல் அகர்வால் - இன்ஸ்டாவில் வைரலானப் புகைப்படங்கள்

மகாராணியாக ஜொலித்த காஜல் அகர்வால் - இன்ஸ்டாவில் வைரலானப் புகைப்படங்கள்
Published on: 

நடிகை காஜல் அகர்வால் அவரின் திருமணப் புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நடிகை காஜல் அகர்வால் தொழிலதிபர் கெளதம் கிட்சிலுவை கடந்த 30 ஆம் தேதி கரம் பிடித்தார். இவர்களது திருமணம் மும்பையிலுள்ள தாஜ் மஹால் பேலஸ் ஹோட்டலில் வைத்து நடைபெற்றது. இந்தத் திருமண வைபவத்தில் மணமக்களின் இருவீட்டாரும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

இந்நிலையில் தற்போது திருமணத்தின்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள காஜல் அகர்வால் “ ஊரடங்குக்கு இடையே திருமண வேலைகளை மேற்கொள்வது சவாலாகவே இருந்தது. மிகச் சிறிதாக நடைபெற்ற விழாவில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் அனைத்தும் கடைப்பிடிக்கப்பட்டது. விழாவில் கலந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

ராஜா ராணியாக மிளிரும் தம்பதியின் புகைப்படங்கள் தற்போது நெட்டிசன்களை உச்சு கொட்ட வைத்துக்கொண்டிருக்கிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com