\
தமன்னா போனார், காஜல் வந்தார்: இது குயின் கதை!

தமன்னா போனார், காஜல் வந்தார்: இது குயின் கதை!

தமன்னா போனார், காஜல் வந்தார்: இது குயின் கதை!
Published on: 

கங்கனா நடித்து இந்தியில் சூப்பர் ஹிட்டான படம், ‘குயின்’. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் வாங்கியிருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் அவரே இதை தயாரிக்க இருப்பதாக கூறியிருந்தார். நடிகை ரேவதி படத்தை இயக்குவார் என்றும் சுகாசினி மணிரத்னம் வசனம் எழுதுகிறார் என்றும் கூறப்பட்டது. ஹீரோயினாக நடிக்க தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். பின்னர் அந்தப் படத்தில் இருந்து விலகிவிட்டதாக தமன்னா கூறியிருந்தார். 
இந்நிலையில் இந்தப் படத்தை ரமேஷ் அரவிந்த் இப்போது தமிழ், கன்னடத்தில் இயக்குகிறார். ’பட்டர்பிளை’ என்று கன்னடத்துக்கு டைட்டில் வைத்துள்ளனர். பாருல் யாதவ் ஹீரோயின். தமிழில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்கிறார். இத்தகவலை ரமேஷ் அரவிந்த் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com