நதிகளை இணைக்க நடிகை காஜல் அகர்வால் ஆதரவு தெரிவித்துள்ளார்.
நதிகளை இணைக்க வேண்டிய பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார் ஜக்கி வாசுதேவ். அவரது முயற்சிக்கு ரஜினிகாந்த் தனது ஆதரவை ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.
இதையொட்டி பல்வேறு திரைத்துறையினர் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இதற்கான விழாவை மும்பையில் ஒருகிணைத்திருந்தார் ஜக்கி. வார்லி ஸ்டுடியோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காஜல் அகர்வால் தனது சகோதரியுடன் கலந்து கொண்டார். மிகுந்த எதிர்பார்ப்புடன் நாங்கள் இங்கே கூடியுள்ளோம். நல்ல விஷயத்தை முன்னிட்டு கூடியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மாற்றத்தை நாம் தான் தொடங்க வேண்டும். அதை நம்மில் இருந்து ஆரம்பிப்போம். நீங்களும் உங்களது பங்குக்கு குறிப்பிட்டுள்ள போன் நம்பருக்கு மிஸ்டு கால் கொடுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கான வீடியோ வலைதளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.

