‘சிறு வியாபாரிகளை ஆதரியுங்கள்.. அவர்கள் வாழ்வுக்கு உதவுங்கள்’ - காஜல் அகர்வால்

‘சிறு வியாபாரிகளை ஆதரியுங்கள்.. அவர்கள் வாழ்வுக்கு உதவுங்கள்’ - காஜல் அகர்வால்

‘சிறு வியாபாரிகளை ஆதரியுங்கள்.. அவர்கள் வாழ்வுக்கு உதவுங்கள்’ - காஜல் அகர்வால்
Published on
 ஊரடங்கு உத்தரவு முடிந்ததும் சிறு வியாபாரிகளை ஆதரியுங்கள் என்று நடிகை காஜல் அகர்வால் இன்ஸ்டா பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 
கொரோனா நோய்க்கான நெருக்கடி முடிவடைந்ததும் சிறு வணிகர்களை, உள்ளூர் வியாபாரிகளை ஆதரவளிக்குமாறு நடிகை காஜல் அகர்வால் நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். நாட்டு மக்கள் இந்த விடுமுறைக் காலம் முடிவடைந்ததும், உள்ளூர் பொருட்கள், சிறு வியாபாரிகள் விற்பனை செய்யும் காய்கறிகள் மற்றும் உடைகளை வாங்கி அவர்களை ஊக்குவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இந்தியப் பொருட்களையே வாங்கும் படியும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார். 
இந்தச் சிறு வணிகர்கள் தங்களது வியாபாரத்தைத்  திரும்பப் பெற்று அவர்களின் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்றால் உங்களது ஆதரவு இல்லாமல் அது நடக்காது என்றும் அவர் கூறியுள்ளார். ஆகவே ஆதரவாக  நிற்கவும் வளர்த்துக் கொள்ளவும் உதவுவதில் நம்முடைய பங்களிப்பைச் செய்வோம் என்று அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
காஜல் அகர்வால் தற்போது ஷங்கரின்  இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பில் நடந்த விபத்தால், இப்படத்திற்கான அனைத்து வேலைகளும் நிறுத்தப்பட்டன. மேலும்  தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் சில படங்களில் இவர் ஒப்பந்தமாகி உள்ளார். இயக்குநரும் நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்கி உள்ள பாரிஸ் பாரிஸ் பட வெளியீட்டிற்காக இவர் காத்துக் கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com