எனக்கு 2017 மகத்தான காவிய ஆண்டு: காஜல் அகர்வால் ட்விட்
கடந்த ஆண்டு தனக்கு சிறப்பான காவிய ஆண்டாக இருந்ததாக நடிகை காஜல் அகர்வால் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
காஜல் 2017-ம் ஆண்டு குறித்து, “கைதி150யில் நடிகர் சிரஞ்சீவி உடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தேஜா மற்றும் என் நெருங்கிய நண்பர் ராணா உடன் சேர்ந்து நேனே ராஜூ நேனே மந்திரி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தமிழில் அஜித் உடன் விவேகம் நடித்தேன். மிக சவாலான திரைப்படம் இது. அற்புதமான மனிதர் அஜித். அவருடன் நடித்ததும் இயக்குநர் சிவா இயக்கத்தில் பணி புரிந்ததும் மகிழ்ச்சியான அனுபவம். அதோடு என்னுடைய விருப்பத்திற்குரிய நடிகர் அஜித். அவருடன் நடித்த அந்த நாட்களை மறக்க முடியாது. அதைபோல மெர்சல். இதில் நடித்தது மாபெரும் அனுபவம். என் ஃபேவரைட் இயக்குநர் அட்லி மற்றும் விஜய் உடன் திரும்ப நடித்ததில் மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “எனக்கு ட்ராவல் செய்வது பிடிக்கும். உணர்வுப்பூர்வமான ஆன்மிக அனுபவங்களை சந்திப்பது பிடிக்கும். அப்படி சிறப்பான மனிதர்களை சந்தித்தும் கடந்த ஆண்டில்தான். இதற்காக என் அடிமனசில் இருந்து பலருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன். மேலும் எனக்கு உங்களின் அன்பும் ஆதரவும் தேவை” என்று அவர் கூறியுள்ளார்.