சினிமா
மன ஆறுதலுக்காக திருப்பதி கோயிலுக்கு வந்த காஜல் அகர்வால்
மன ஆறுதலுக்காக திருப்பதி கோயிலுக்கு வந்த காஜல் அகர்வால்
திருப்பதி கோயிலுக்கு சென்று நடிகை காஜல் அகர்வால் சாமி தரிசனம் செய்தார்.
தமிழ் சினிமாவில் டாப் லிஸ்ட் ஹீரோயின்கள் பட்டியலில் இருப்பவர் காஜல் அகர்வால். அதே அளவுக்கு அவர் தெலுங்கு பட உலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் திடீரென்று தனது குடும்பத்தினருடன் சென்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்காக தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பு வழிப்பாடுகளை செய்தனர். அப்போது அங்கு வழங்கப்பட்ட பிரசாதங்களை அவர் பெற்றுக் கொண்டார். அவரை கண்டதும் பெரும் கூட்டம் அங்கே கூடியது. அவர் தனது ரசிகர்களுடன் செல்ஃபி மற்றும் புகைப்படங்களை எடுத்து கொண்டார். அவரிடம் இந்தத் திடீர் விசிட் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், மன ஆறுதல் வேண்டி குடும்பத்தினருடன் வழிபட கோயிலுக்கு வந்ததாக குறிப்பிட்டார்.