\
கல்யாணின் அடுத்த படம் 'கோஷ்டி'... முதன்மைக் கதாபாத்திரத்தில் காஜல் அகர்வால்!

கல்யாணின் அடுத்த படம் 'கோஷ்டி'... முதன்மைக் கதாபாத்திரத்தில் காஜல் அகர்வால்!

கல்யாணின் அடுத்த படம் 'கோஷ்டி'... முதன்மைக் கதாபாத்திரத்தில் காஜல் அகர்வால்!
Published on

'குலேபகாவலி', 'ஜாக்பாட்' திரைப்படங்களை இயக்கிய கல்யாண் தற்போது காஜல் அகர்வால் நடிப்பில் புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். அந்தத் திரைப்படத்திற்கு 'கோஷ்டி' என தலைப்பு வைத்துள்ளனர்.

தன்னுடைய முதல் இரண்டு திரைப்படத்திலும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து இருந்தார் கல்யாண். அதேபோல், நாயகிகளை முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க வைத்தார். அந்த பாணியிலேயே 'கோஷ்டி' திரைப்படத்தையும் உருவாக்கி வருகிறார்.

இந்தத் திரைப்படம் தனக்கு பெரும் வெற்றியையும், இன்னும் பல வாய்ப்புகளையும் பெற்றுத் தரும் என்று காஜல் அகர்வால் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். மேலும், அவருடன் கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com