ஆண் குழந்தைக்கு அம்மாவானார் நடிகை காஜல் அகர்வால்

ஆண் குழந்தைக்கு அம்மாவானார் நடிகை காஜல் அகர்வால்
ஆண் குழந்தைக்கு அம்மாவானார் நடிகை காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வால் ஆண் குழந்தைக்கு தயாகியுள்ளார்.

நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் சமீபத்தில் ‘ஹே சினாமிகா’ வெளியானது. ‘கோஸ்டி’, ‘ஆச்சார்யா’, உள்ளிட்டப் படங்களும் காஜல் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும்போதே காஜல் அகர்வால், கடந்த 2020 ஆண்டு, கவுதம் கிச்சுலு என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப்பிறகு தாய்மை அடைந்த காஜல் அகர்வால் நெட்டிசன்களின் உருவகேலிக்கும் ஆளாகினார். “எனது வாழ்க்கையில், எனது உடலில், எனது வீட்டில் மிக குறிப்பாக என்னுடைய பணியிடத்தில் அற்புதமான புதிய மாற்றங்களை சமீப காலமாக நான் சந்தித்து வருகிறேன். மேலும், குறிப்பிட்ட சில கருத்துக்கள், உடல் கேலி பதிவுகள், மீம்கள் எதற்கும் உதவாது. இதனால் இதனை கடந்து கருணையோடு நடந்துகொள்ள கற்றுக்கொள்வோம். கொஞ்சம் கஷ்டம் தான் என நினைக்கிறேன், வாழ்வதும் வாழ விடுவதும்!

இதைப் போன்ற வாழ்க்கை சிக்கல்களை எதிர்கொள்பவர்களுக்கு என்னுடைய சில கருத்துகளை இங்கு பகிர்கிறேன். முக்கியமாக இந்த தருணத்தை புரிந்து கொள்ளாத சுயநல முட்டாள்கள் இதனை நிச்சயமாக படிக்க வேண்டும். கர்ப்ப காலத்தில், நம்முடைய உடல் எடை கூடுவதையும் சேர்த்து, பல மாற்றங்களை சந்திக்கிறது. கர்ப்ப காலத்தில் நம்முடைய வயிறும், மார்பகங்களும் ஹார்மோன்ஸ் மாற்றங்களால் பெரிதாகிறது. ஏனெனில், குழந்தை வளர்வதற்கு ஏற்ப அதற்கு தேவையான ஊட்டமளிப்பதற்காக நமது உடல் தயாராகிறது” என்று பதிலடி கொடுத்திருந்தார்.

காஜலை உருவகேலி செய்ததும், அதற்கு அவரின் எதிர்வினையும் தாய்மையும் கவனிக்க வைத்தது. இந்த நிலையில், காஜல் அகர்வாலுக்கு இன்று ஆண் குழந்தைப் பிறந்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் இதுகுறித்து அதிகாரபூர்வமாக காஜல் அகர்வாலும் அவரது கணவர் கவுதம் கிச்சுலுவும்  அறிவிக்கவில்லை என்றாலும், காஜல் தங்கை நிஷா அகர்வால் இன்று வாழ்க்கையின் அற்புதமான நாள் இன்று இன்ஸ்டாவில் போஸ்ட் போட்டுள்ளார். அதோடு, காஜல் அகர்வால் ஆண்குழந்தைக்கு தயாகியுள்ளார் என்ற பெரியரில்லாத இன்ஸ்டா ஸ்டோரியும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com