\
சிரஞ்சீவியின் ’ஆச்சார்யா’ படப்பிடிப்புக்கு கணவருடன் வந்த காஜல்!

சிரஞ்சீவியின் ’ஆச்சார்யா’ படப்பிடிப்புக்கு கணவருடன் வந்த காஜல்!

சிரஞ்சீவியின் ’ஆச்சார்யா’ படப்பிடிப்புக்கு கணவருடன் வந்த காஜல்!
Published on

திருமணத்திற்குப் பிறகு சிரஞ்சீவியின் ‘ஆச்சார்யா’ படப்பிடிப்புக்கு கணவருடன் வந்த காஜல் அகர்வாலுக்கு நடிகர் சிரஞ்சீவி பூங்கொத்து, கேக் வெட்டி வரவேற்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளன.

தமிழ், தெலுங்கின் முன்னணி நடிகை காஜல் அகர்வால் கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி காதல் கணவர் கெளதம் கிட்சிலுவை கரம்பிடித்தார். திருமணத்திற்கு முன்பு கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’, சிரஞ்சீவியின் ‘ஆச்சார்யா’ படங்களில் ஹீரோயினாக ஒப்பந்தமனார்.

திருமணம் செய்துகொண்டதால், நடிப்பிற்கு ஒன்றரை மாதங்கள் பிரேக் விட்டிருந்தவர், இன்று நடைபெற்றுவரும் ஆச்சார்யா ஷூட்டிங்கில் கணவர் கெளதம் கிட்சிலுவுடன் கலந்துகொண்டார்.

படத்தின் ஹீரோ சிரஞ்சீவியும் படக்குழுவினரும் இருவருக்கும் பூங்கொத்துகள் கொடுத்து வரவேற்றதோடு மாலை அணிவித்தும் கேக் வெட்டியும் உற்சாகமாக வாழ்த்துகளைக் கூறியுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com