கைதி ரீமேக்கா? தலைவர் 169 படமா? : எதை இயக்கப்போகிறார் லோகேஷ் கனகராஜ்?

கைதி ரீமேக்கா? தலைவர் 169 படமா? : எதை இயக்கப்போகிறார் லோகேஷ் கனகராஜ்?

கைதி ரீமேக்கா? தலைவர் 169 படமா? : எதை இயக்கப்போகிறார் லோகேஷ் கனகராஜ்?
Published on

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், 'கைதி' படத்தை இந்தியில் ரீமேக் செய்யப்போகிறாரா? அல்லது 'தலைவர் 169' படத்தை இயக்க போகிறாரா? என்பது குறித்து திரைதுறையினர் வட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'கைதி'. இதில் நடிகர் கார்த்தி நடித்திருந்தார். இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் இப் படம் பாக்ஸ் ஆபிசில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. ஆகவே, இந்தப் படத்தை பிறமொழிகளில் ரீமேக் செய்வதற்கு அதிக போட்டிகள் நிலவி வருகின்றன.

இந்நிலையில் 'கைதி' படத்தினை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. அதனையடுத்து அஜய் தேவ்கன் இதில் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், படத்தினை இயக்கப்போகும் இயக்குநர் யார்? வேறு எந்த எந்த நடிகர்கள் நடிக்க உள்ளனர் என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான செய்திகள் வெளியாகவில்லை.

இதனிடையே சினிமா துறையினர் இடையே ஒரு பேச்சு அடிப்பட்டு வருகிறது. லோகேஷ் கனகராஜ் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ள 'கைதி' படத்தை இயக்கப் போகிறாரா? அல்லது ரஜினியின் 'தலைவர் 169' படத்தை இயக்க இருக்கிறாரா? என்பதுதான் அந்தப் பேச்சு. லோகேஷ் கனகராஜ் தற்போது விஜயின் 'மாஸ்டர்' படத்தை இயக்கி வருகிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இந்தப் படத்தை வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, இவர் ரஜினிகாந்த் நடிக்க உள்ள 169 வது படத்தை இயக்குப்போவதாகவும் ஒரு தகவல் அடிப்பட்டு வருகிறது. மேலும் இதனை நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.

கமல்ஹாசன் அவரது ராஜ் கமல் பிலிம்ஸ் மூலம் எடுக்க திட்டமிட்டுள்ளார் என ஏற்கெனவே தகவல் கசிந்தது. ஆகவே 'கைதி' படத்தின் இந்தி ரீமேக்கை லோகேஷ் கனகராஜ் இயக்க வாய்ப்பில்லை என்றும் இளம் இயக்குநரான இவர், பாலிவுட் சினிமாவை கையாள்வதில் கொஞ்சம் தடைகள் நேரலாம் என்றும் பேச்சுக்கள் அடிபடுகின்றன. ஆனால் இது குறித்து லோகேஷ் கனகராஜ் அல்லது படம் சார்ந்த நிறுவனமோ அதிகாரப்பூர்வமாக எந்தச் செய்தியையும் இதுவரை வெளியிடவில்லை. ஆக, உறுதி செய்யப்படும் வரை இது குறித்து ஊகங்கள் மட்டுமே பகிரப்பட்டு வருகின்றன. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com