‘கடாரம் கொண்டான்’ டீசர் தயார் - இயக்குநர் ராஜேஷ் செல்வா

‘கடாரம் கொண்டான்’ டீசர் தயார் - இயக்குநர் ராஜேஷ் செல்வா

‘கடாரம் கொண்டான்’ டீசர் தயார் - இயக்குநர் ராஜேஷ் செல்வா
Published on

கடாரம் கொண்டான் டீசர் தயார் நிலையில் உள்ளதாக அப்படத்தின் இயக்குநர் ராஜேஷ் செல்வா தெரிவித்துள்ளார்.

நடிகர் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘சாமி ஸ்கொயர்’. இது எதிர்பார்த்த அளவு வெற்றியடையவில்லை. இதையடுத்து கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் வெளியீட்டு தேதி இன்னமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. 


இந்நிலையில் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷ்னல் மற்றும் டிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் விக்ரம் நடிப்பில் கடாரம் கொண்டான் திரைப்படம் உருவாகியுள்ளது. ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு சீனிவாஸ் குதா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தை ‘தூங்காவனம்’ திரைப்படத்தை இயக்கிய ராஜேஷ் செல்வா இயக்கியுள்ளார். இதில் விக்ரமுக்கு ஜோடியாக கமல்ஹாசனின் மகள் அக்‌ஷராஹாசன் நடிக்கிறார்.

இந்தத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் படக்குழு வெளியிட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவுற்ற நிலையில், இதன் டீசர் ஜனவரி 15 ஆம் தேதி வெளியிடப்படும் என ஏற்கெனவே தகவல் வெளியாகியது.

இந்நிலையில், இந்த படத்தின் இயக்குநர் ராஜேஷ் செல்வா தனது ட்விட்டர் பக்கத்தில், “ கடாரம் கொண்டான் டீசர் தயார் நிலையில் உள்ளது. டீசர் நல்லபடியாக உருவாகியுள்ளது. இது சீயான் ரசிகர்களுக்கும் சினிமா ரசிகர்களுக்கும் திருப்திகரமாக இருக்கும் என நம்புகிறேன். இன்னும் 2 நாட்களில் டீசர் வெளியாகும்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com