\
“ஜோதிகா படப் பிரச்னையில் அரசு உதவும்” - கடம்பூர் ராஜூ உறுதி

“ஜோதிகா படப் பிரச்னையில் அரசு உதவும்” - கடம்பூர் ராஜூ உறுதி

“ஜோதிகா படப் பிரச்னையில் அரசு உதவும்” - கடம்பூர் ராஜூ உறுதி
Published on
நடிகை ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் திரைப்படத்தின் ஆன்லைனில் வெளியிடுவது குறித்த பிரச்னையை தீர்க்க அரசு உதவி செய்யும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ உறுதி அளித்துள்ளார்.
 
ஜோதிகாவின் நடிப்பில் 2டி நிறுவனம் தயாரித்துள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம் இந்த மாதம் வெளியாக இருந்தது. பொது முடக்க உத்தரவு காரணமாகப் பல புதிய திரைப்படங்களைத் திரையிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை ஆன்லைனில் வெளியிடும் உரிமையை, அமேசான் பல கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாகத் தெரிகிறது.
 
 
எனவே, பொன்மகள் வந்தாள் திரைப்படம் திரையரங்கில் வெளியிடப்படாமல், நேரடியாக ஆன்லைனில் வெளியாக உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள திரையரங்க உரிமையாளர்கள், இனி 2டி நிறுவன தயாரிப்பு படங்களை வெளியிட மாட்டோம் எனப் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். 
 
 
இந்த விவகாரம் குறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, திரைப்பட தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் பேசி தீர்க்க வேண்டிய பிரச்னை என்றும், இந்த விவகாரத்தில் சுமூகமான முடிவு ஏற்பட அரசு உதவி செய்யும் எனவும் கூறினார்.
 
 
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com