கார்த்தி நடித்து வரும் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் சுவாரஸ்யமான புகைப்படங்கள் வெளிவந்துள்ளன.
'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படம் 'கடைக்குட்டி சிங்கம்'. இந்தப் படத்தில் சாயிஷா சைகல், சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், ப்ரியா பவானி சங்கர், பானுப்ரியா, மௌனிகா உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளம் நடித்து வருகின்றது. படத்தின் பெரும்பாலான சூட்டிங் முடிந்துவிட்டது. இமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். அண்மையில் வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் 'பயிர் செய்ய விரும்பு' என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. இதன்மூலம் படம் விவசாயம் சார்ந்த கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பாடல் காட்சிக்கான புகைப்படங்கள் சிலவற்றை படக்குழுவினரின் வெளியிட்டுள்ளனர்.