தமிழில் பேசி அசத்திய கபில்தேவ்: மகிழ்ச்சியில் ஆர்.ஜே. பாலாஜி

தமிழில் பேசி அசத்திய கபில்தேவ்: மகிழ்ச்சியில் ஆர்.ஜே. பாலாஜி

தமிழில் பேசி அசத்திய கபில்தேவ்: மகிழ்ச்சியில் ஆர்.ஜே. பாலாஜி
Published on

ஆர்.ஜே.பாலாஜி  நடித்துள்ள ‘எல்.கே.ஜி’ படத்திற்கு கபில்தேவ் தமிழில் வாழ்த்துகூறிய வீடியோ அவரது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

ஆர்.ஜே.பாலாஜி முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் படம் ‘எல்.கே.ஜி’. இந்தப் படத்தின் கதை மற்றும் திரைக்கதையை அவரே எழுதியுள்ளார். இதனை பிரபு இயக்கியுள்ளார். கதாநாயகியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் நாஞ்சில் சம்பத் நடித்திருக்கிறார். இப்படத்திற்கான போஸ்டர் வெளிவந்த போது, இவர் தனிக்கட்சி தொடங்கி விட்டார் என சில வதந்திகள் வந்தன.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. டீசரில் இடம் பெற்ற வசனங்கள் அரசியலை கலாய்ப்பதாக இருந்தது. ஏற்கெனவே இப்படம் பிப்ரவரி 22-ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்நிலையில் 'எல்.கே.ஜி' படத்துக்கான  ப்ரமோஷன் வேலைகளில் மிக மும்மரமாக படக்குழு வேலை செய்து கொண்டிருக்கிறது.

பாலாஜி கிரிக்கெட்டில் வர்ணனையாளராக இருந்தபோது கபில்தேவ் அவருக்கு நன்கு அறிமுகமாகியிருந்தார். ஆகவே கபில்தேவ் தனது ட்விட்டர் பக்கத்தில் 'எல்.கே.ஜி' படத்தை வாழ்த்தி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ பதிவில் அவர், “வணக்கம். ஒரு கிரிக்கெட் வீரனாக  சில சமயங்களில் நான் நினைப்பது உண்டு; கிரிக்கெட் விளையாடுவதுகூட எளிது. ஆனால், திரைப்படங்களில் வேலை செய்வது மிகக் கடினமானது. ஆகவே ஆர் .ஜே.பாலாஜிக்கு  எனது வாழ்த்துகள்”எனக் கூறியுள்ளார். இதில் என்ன சிறப்பு என்றால், கபில்தேவ் தமிழில் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார் என்பதுதான். வழக்கமாக ஹர்பஜன் சிங்தான் தமிழில் வாழ்த்துகளை பேசி அசத்தி வந்தார். இப்போது அந்த வரிசையில் கபில்தேவும் இடம் பிடித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com