முகம் ஒத்த இரட்டையர்களா நீங்கள்..? ஜோதிகாவிற்காக தேடுகிறது படக்குழு

முகம் ஒத்த இரட்டையர்களா நீங்கள்..? ஜோதிகாவிற்காக தேடுகிறது படக்குழு

முகம் ஒத்த இரட்டையர்களா நீங்கள்..? ஜோதிகாவிற்காக தேடுகிறது படக்குழு
Published on

ஜோதிகாவிற்கு அக்காவாக நடிக்க ரியல் லைஃப் இரட்டையர்களை ‘காற்றின் மொழி’ படக்குழு தீவிரமாக தேடி வருகிறது.

வித்யா பாலன் நடிப்பில் ஹிந்தியில் செம ஹிட் அடித்த திரைப்படம் ‘தும்ஹாரி சுலு’. இப்படம் தமிழில் ‘ காற்றின் மொழி’ என்கிற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. படத்தை ராதா மோகன் இயக்குகிறார். ஜோதிகா நாயகியாக நடிக்கிறார். இதற்கு முன் கடந்த 2007-ம் ஆண்டு ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா ‘மொழி’ படத்தில் நடித்திருந்த நிலையில் தற்போது 11 வருடங்களுக்கு பின் இந்த கூட்டணி மீண்டும் கைகோர்க்கிறது. இந்தப் படத்தை தனஞ்செயன் தயாரிக்கிறார்.

இந்நிலையில் ‘காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகாவிற்கு அக்காவாக நடிக்க இரட்டையர்களை படக்குழு தீவிரமாக தேடி வருகிறது. அதுவும் முகம் ஒத்த இரட்டையர்களாக இருந்தால் கதைக்கு ஏற்றப்படி இருக்கும் எனக் கருதிய படக்குழு, அதற்கான தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளது. ஜோதிகாவின் அக்காவாக வலம்வர இருக்கும் அந்த இரட்டையர்களுக்கும் படத்தில் வலுவான கதாபாத்திரம் இருக்கும் என சொல்லப்படுகிறது. ஜோதிகாவின் அக்காவாக நடிக்க இருக்கும் அந்த ரியல் லைப் இரட்டையர்கள்தான் யாரோ..?

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com