விஜய் சேதுபதியின் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ டூ டூ டூ பாடல் வெளியீடு

விஜய் சேதுபதியின் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ டூ டூ டூ பாடல் வெளியீடு
விஜய் சேதுபதியின் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ டூ டூ டூ  பாடல் வெளியீடு

விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்கும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் ’டூ டூ டூ’ பாடல் வெளியாகி இருக்கிறது.

’நானும் ரெளடிதான்’ வெற்றிக்குப்பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மீண்டும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் இணைந்துள்ளனர். மற்றொரு நாயகியாக சமந்தா நடிக்கிறார். இதற்கான படப்பிடிப்பு கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கியது. மேலும், படத்தின் 90 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன.

இறுதிக்கட்டப் படப்பிடிப்பு கடந்த மாதம் புதுச்சேரியில் படமாக்கப்பட்டது. அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடல் ‘ரெண்டு காதல்’ பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தையொட்டி வெளியான நிலையில், தற்போது இரண்டாவது ‘டூ.. டூ.. டூ’ பாடல் இன்று மதியம் 2.22 மணிக்கு விக்னேஷ் சிவனின் பிறந்தநாளையொட்டி வெளியாகி இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com