\
நேரடியாக ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதி - நயன்தாராவின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’?

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதி - நயன்தாராவின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’?

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதி - நயன்தாராவின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’?
Published on

விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்கும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

’நானும் ரெளடிதான்’ வெற்றிக்குப்பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மீண்டும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் இணைந்துள்ளனர். மற்றொரு நாயகியாக சமந்தா நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், படத்தின் இரண்டுப் பாடல்களும் வெளியாகி கவனம் ஈர்த்தன.

இந்த நிலையில், ‘காத்துவாக்கு ரெண்டு காதல்’ நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாலின் வரும் நவம்பர் 3 ஆம் தேதி வெளியாகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com