\
ரஜினி பற்றி காலா படத்தின் வில்லன் என்ன சொல்கிறார் தெரியுமா?

ரஜினி பற்றி காலா படத்தின் வில்லன் என்ன சொல்கிறார் தெரியுமா?

ரஜினி பற்றி காலா படத்தின் வில்லன் என்ன சொல்கிறார் தெரியுமா?
Published on

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் காலா படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் பங்கஜ் திரிபாதி வில்லனாக நடிக்கிறார்.

காலா படத்தில் பீகாரைச் சேர்ந்த பாலிவுட் நடிகர் பங்கஜ் திரிபாதி வில்லனாக நடிக்கிறார். அவர் ரஜினிகாந்த் குறித்து பேசும்போது, “ரஜினி சார் படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பது பெருமையான விஷயம். எனக்கு அவர்தான் ரோல்மாடல். ஒரு சூப்பர்ஸ்டாராக இருந்தும் மிக எளிமையாக இருக்கிறார். சினிமா மேக்கப், கெட்டப் போடுவது பெரிய விஷயம் இல்லை. ஒரு மனிதனாக எளிமையாகவும், உண்மையாகவும் இருக்க வேண்டும். இன்றைய இளம் தலைமுறை நடிகர்கள் அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் அதுதான்” என்று அவர் கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com