ஈஸ்வரி ராவ் மனைவி, ஹூமா குரோஷி காதலி.. இது காலா டேட்டா!

ஈஸ்வரி ராவ் மனைவி, ஹூமா குரோஷி காதலி.. இது காலா டேட்டா!
ஈஸ்வரி ராவ் மனைவி, ஹூமா குரோஷி காதலி.. இது காலா டேட்டா!

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கும் காலா படத்தில் ஈஸ்வரி ராவ், ரஜினியின் மனைவியாக நடிக்கிறார் என்றும், ஹூமா குரேஷி ரஜினியை ஒருதலையாக காதலிக்கும் கதாப்பாத்திரத்திலும் நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

காலா படத்தில் ரஜினிக்கு ஜோடி அஞ்சலி பட்டேல் என்றும், ஹூமா குரோஷிதான் என்றும் பேசப்பட்டு வந்தது. ஹூமா குரோஷி ரஜினியின் பின்னால் பைக்கில் அமர்ந்து செல்லும் புகைப்படங்கள் வெளியாகி இருந்ததால் அவர் தான் காலாவில் ரஜினியின் நாயகி எனக் கூறி வந்தனர். ஆனால் ஹூமா ஹீரோயின் இல்லையாம். ரஜினியின் மனைவியாக நடிப்பவர் ஈஸ்வரி ராவ். அரசியல்வாதியாக நடிக்கும் நானா படேகரிடம் இருந்து ரஜினிக்கு உதவும் முக்கியப்பத்திரத்தில் தான் நடிக்கிறாராம் ஹூமா. அப்படி உதவ வரும் வேளையில் ரஜினியை ஒருதலையாய் காதலிக்கும் ஜரீனா கேரக்டரில் நடிக்கிறார் என்கிறது படக்குழு. குப்பத்தில் இருந்து கேங்ஸ்டராகும் கதைதான் காலா என்கிறார்கள். அப்போ அஞ்சலி பட்டேலின் கதி..?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com