\
11 மணிக்கு காலாவின் ரவுடித்தனம் - தனுஷ் ட்வீட்

11 மணிக்கு காலாவின் ரவுடித்தனம் - தனுஷ் ட்வீட்

11 மணிக்கு காலாவின் ரவுடித்தனம் - தனுஷ் ட்வீட்
Published on

காலா டீஸர் வெளியாகும் நேரம் குறித்த தகவலை தனுஷ் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

கபாலி வெற்றிக்குப் பின் நடிகர் ரஜினிகாந்த் - இயக்குநர் பா.ரஞ்சித் கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘காலா’. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். நடிகரும், ரஜினியின் மருமகனுமான தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் தயாராகியுள்ள இப்படம், வரும் ஏப்ரல் மாதம் 27ம் தேதி உலகெங்கும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

மார்ச் ஒன்றாம் தேதி காலா திரைப்படத்தின் டீஸர் வெளியாகும் என்று சில தினங்களுக்கு முன்பு தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இந்த தகவலோடு, “இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்த பாத்தது இல்ல..ல ..? பாப்பீங்க!!! “ என்ற வரிகளையும் பதிவிட்டு இருந்தார். 

இந்நிலையில், காலா டீஸர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகிறது என்று தனுஷ் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

நாளை டீஸர் வெளியாவதால் ரஜினி ரசிகர்கள் தங்களது எதிர்பார்ப்பையும், மகிழ்ச்சியையும் சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com