\
“இந்தக் கரிகாலனோட முழு ரவுடித்தனத்த பாப்பீங்க!!!”: வைரலாகும் ரஜினி வசனம்

“இந்தக் கரிகாலனோட முழு ரவுடித்தனத்த பாப்பீங்க!!!”: வைரலாகும் ரஜினி வசனம்

“இந்தக் கரிகாலனோட முழு ரவுடித்தனத்த பாப்பீங்க!!!”: வைரலாகும் ரஜினி வசனம்
Published on

காலா டீஸர் பற்றிய செய்தி ட்விட்டரில் வைரலாகி வருகிறது. 

‘கபாலி’ வெற்றிக்குப் பின் நடிகர் ரஜினிகாந்த் - இயக்குநர் பா.ரஞ்சித் கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘காலா’. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். நடிகரும், ரஜினியின் மருமகனுமான தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் தயாராகியுள்ள இப்படம், வரும் ஏப்ரல் மாதம் 27ம் தேதி உலகெங்கும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மார்ச் ஒன்றாம் தேதி ‘காலா’  திரைப்படத்தின் டீஸர் வெளியாகிறது. தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். இந்தத் தகவலோடு, “ இந்தக் கரிகாலனோட முழு ரவுடித்தனத்த பாத்தது இல்ல..ல ..? பாப்பீங்க!!! “ என்ற வரிகளையும் பதிவிட்டுள்ளார். 

நேற்று ரஜினியின் அடுத்தப் படத்தை இளம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த நிலையில் தற்போது அடுத்த நாளிலேயே ‘காலா’  டீஸர் அறிவிப்பு வெளியாகியுள்ளதால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com