சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் ஜூன் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று இரவு வெளியிடப்பட்டு கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் பார்த்து வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
காலா தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியிடப்படவுள்ளது. இதற்காக இன்று மாலை ஐதராபாத்தில் படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ரஜினி மாலை ஐதராபாத் செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் காரணமாக தற்போது கொண்டாட்டமாக எதுவும் வேண்டாம் என ரஜினிகாந்த் முடிவெடுத்தாக தெரிகிறது. இதன் காரணமாக நிகழ்ச்சியில் பங்கேற்க ரஜினி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஐதராபாத்தில் இன்று நடைபெறவிருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.