காட்சிகள் வெளியானதால் கலக்கத்தில்‘காலா’படக்குழு
ரஜனி நடித்து ஏப்ரல் 27ம் தேதி வெளியாக இருக்கும் ‘காலா’ திரைப்படத்தின் ஒரு சில காட்சிகள் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.
கபாலி வெற்றிக்குப் பின் நடிகர் ரஜினிகாந்த் - இயக்குநர் பா.ரஞ்சித் கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘காலா’.இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். நடிகரும், ரஜினியின் மருமகனுமான தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் தயாராகியுள்ள இப்படம், வரும் ஏப்ரல் மாதம் 27ம் தேதி உலகெங்கும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ரஜினியின்‘2.0’ திரைப்படம் வெளியாகத் தாமதமாவதையொட்டி, ‘காலா’ திரைப்படம் முன்கூட்டியே வெளியிடப்படுகிறது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் ஒருசில காட்சிகள் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. படம் வெளியாவதற்கு முன்னரே, சில காட்சிகள் வெளியாகியிருப்பது படக்குழுவினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.