ரஜினியின் ‘காலா’ படத்திற்க்கு யு/ஏ சான்றிதழ் வழங்கபட்ட நிலையில், தற்போது மீண்டும் மறு தணிக்கைக்கு அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஜினியுடன் ரஞ்சித் இரண்டாவது முறையாக இணையும் படம் ‘காலா’. தனுஷ் தயாரித்துள்ளா இப்படத்திற்கும் ரசிகர்களிடம் நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில் படத்தை சென்சாருக்கு அனுப்ப சில வசனங்களுக்கு மியூட், சில காட்சிகளை கட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் யு/ஏ சான்றிதழ் வழங்கியதாக கூறப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்சார் அதிகாரிகளிடம் அப்போதே நீண்ட நேரம் விவாதத்தில் படக்குழு ஈடுபட்டதாகவும் கூட உறுதிபடுத்தாத தகவல்கள் வெளியாகின. எனினும் இதுவரை இது பற்றி யாரும் அதிகாரபூர்வமாக பேசாத நிலையில் தற்போது மீண்டும் படத்தை மறு தணிக்கைகாக அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

